அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)



அல் அய்ன் மண்டல தமுமுகவின் சார்பில் பெண்களுக்கான இஸ்லாமிய நிகழ்ச்சி

அல்லாஹ்வின் கிருபையால் அல் அய்ன் மண்டல தமுமுகவின் சார்பில் பெண்களுக்கான இஸ்லாமிய உள்ளரங்கு நிகழ்ச்சி (இன்று) 27-01-2012  மக்ரிப் தொழுகைக்கு பின்னர் நடைபெற்றது.கத்தாரா கிளை தமுமுக தலைவர் காட்டுமன்னார்குடி சகோதரர் அஸ்கர் அலி தலைமை தாங்கினார்.மண்டல உலமாக்கள் அணி செயலாளர் கொள்ளுமேடு முஹம்மது ரிபாயி திருக்குர்ஆன் விளக்கவுரை நிகழ்த்தினார்.
அமீரக தமுமுக தலைவர் சகோதரர் அதிரை அப்துல் ஹாதி தியாகம் என்ற தலைப்பில்,சஹாபா பெண்மணிகள் தங்களது ஈமானுக்கு கொடுத்த முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.நமது மறுமை வாழ்க்கைக்காக இம்மையில் நாம் தயாரிப்பு செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து தனது உரையில் வலியுறுத்தினார்.
இறுதியாக மண்டல பொருளாளர் நாச்சிகுளம் சகோதரர் அசாலி அஹமது நன்றி கூறினார்.இந்நிகழ்ச்சியில் அல் அய்னில் வசிக்கும் தமிழக சகோதரிகள்  தங்களது  கணவர்,  குழந்தைகளுடன் பெருமளவு கலந்து கொண்டனர்.  
 

தமுமுக-வின் அமீரக நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம்

தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் அமீரக நிர்வாக குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று 20 -01 -2012 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு துபையில் இறைவன் அருளால் சிறப்பாக நடந்து முடிந்தது . அல்ஹம்து லில்லாஹ் .

ஷார்ஜாவில் திருக்குரான் வகுப்புகள்

ஷார்ஜாவில் 4 வயது முதல் 15 வரை உள்ள மாணவர்களுக்கு திருக்குரான் தஜ்விது வகுப்புகள் வெள்ளிக்கிழமைகளில் காலை9 மணி முதல் 11 மணிவரை நடைபெறுகிறது மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் 055-6800275,06-5448539

அல்அய்ன் இரத்ததான முகாம்

 

ஜிமி பகுதி கிளை தமுமுகவின் சார்பில் அறிமுக மற்றும் மார்க்க விளக்க நிகழ்ச்சி

அல் அய்ன் மண்டலத்திற்குட்பட்ட ஜிமி பகுதி கிளை தமுமுகவின் சார்பில் அறிமுக மற்றும் மார்க்க விளக்க நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை (18.11.2011)மக்ரிப் தொழுகைக்கு பின்னர் மண்டல தமுமுக பொருளாளர் நாச்சிகுளம் அசாலி அஹமது தலைமையில் நடைபெற்றது.கதாரா கிளை தமுமுக தலைவர் காட்டுமன்னார்குடி அஸ்கர் அலி திருக்குர்ஆன் ஓதி வரவேற்புரை ஆற்றினார்.மேலப்பாளையம் மவ்லவி பஷீர் அகமது பைஜி இறைசிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்.முன்னாள் மண்டல தலைவர் கொள்ளுமேடு முஹம்மது ரிபாயி இரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்து விளக்கி பேசினார்.அமீரக தமுமுக செயலாளர் யாசின் நூருல்லாஹ் இயக்க ஊழியர்களிடம் இருக்கவேண்டிய தன்மைகள் குறித்து விளக்கினார்.அமீரக தமுமுக துணை செயலாளர் டாக்டர் அப்துல் காதர்,இயக்கம் கடந்து வந்த பாதையை குறித்து நினைவு கூறும் வகையில் உரையாற்றினார்.ஜிமி கிளை பொருளாளர் ஜாகிர் ஹுசைன் நன்றியுரை ஆற்றினார்.முன்னதாக ஜிமி கிளை தலைவராக திருச்சி எம்.முஹம்மது சித்திக் செயலாளராக வேதாளை ஹமீது சுல்தான் பொருளாளராக அபிராமம் ஜாகிர் ஹுசைன் ஆகியோர் நியமிக்க பட்டனர்.இந்நிகழ்ச்சியில் என்சி கேம்ப்,மற்றும் எம்பிஎம் கேம்ப் மற்றும் ஜிமி பகுதியில் வசிக்கும் தமிழக சகோதரர்கள் கலந்து கொண்டனர்.